சமூக பொறுப்பு மற்றும் மனிதாபிமான சேவையின் குறிப்பிடத்தக்க செயலாக, 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி 2025 ஜூன் 19 ஆம் திகதி மட்டக்களப்பில் இரத்த தானத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
தேசத்தின் பாதுகாவலர்
சமூக பொறுப்பு மற்றும் மனிதாபிமான சேவையின் குறிப்பிடத்தக்க செயலாக, 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி 2025 ஜூன் 19 ஆம் திகதி மட்டக்களப்பில் இரத்த தானத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இறந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், 1 வது இலங்கை ரைபள் படையணியின் படையினர், பல்லேகலை பொது மக்களுக்கு 2025 ஜூன் 10 ஆம் திகதி 1 வது இலங்கை ரைபள் படையணியில் அரிசி வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தினர்.
7 வது இலங்கை சிங்க படையணி படையினர் 2025 ஜூன் 16 ஆம் திகதி ஆறுமுத்து புதுகுளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில், ஆறுமுத்து புதுகுளம் கிராமத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்வை நடாத்தினர்.
வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 16 ஆம் திகதி பாலிநகர் முகாம் வளாகத்தில் இரத்த தானத் திட்டத்தை நடாத்தினர்.
வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் அனுராதபுரம் இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 17 ஆம் திகதி தந்திரிமலை விகாரையில் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் இரத்த தான நிகழ்ச்சியை நடாத்தினர்.
மறைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், 141 வது காலாட் பிரிகேட் படையினரால் அதன் கீழ் உள்ள படையலகுகள் மற்றும், ராகம போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 ஜூன் 17, அன்று படையணி வளாகத்தில் இரத்த தான நிகழ்வை முன்னெடுக்கப்பட்டது.
தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 5வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் முல்லைத்தீவு சண்முகரத்னம் தமிழ் பாடசாலை மற்றும் ஒலுமடு தமிழ் பாடசாலையில் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டனர். மேலும் 59வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பாட்டு பாடசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்திய கடற்பகுதியில் எம்எஸ்சீ ஈஎல்எஸ்ஏ 3 கப்பல் கவிழ்ந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் கடற்பகுதியில் 4 வது விஜயபாகு காலாட் படையலகின் படையினர், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வேண்டுகோளிற்கு இணங்க ஆய்வு மற்றும் சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.
"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு ஆதரவாக, 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் 2025 ஜூன் 15 ஆம் திகதி சிப்பியாறு புனித அன்னம்மாள் தேவாலயத்தில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியினால் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் ஏற்பட்ட சந்தேகத்திற்குரிய இரசாயன கசிவை நிவர்த்தி செய்ய ஒரு சிறப்பு இரசாயன படை அனுப்பிவைக்கப்பட்டது. இரசாயன ஆயுத மரபுகளுக்கான தேசிய அதிகார சபையின் (NACWC) தொழில்நுட்ப ஆதரவுடன், 2025 ஜூன் 16 அன்று கொழும்பு தீயணைப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.