Sport

Clear

தேசிய பேஷ் போல் போட்டி 2024 இல் இலங்கை இராணுவ மகளிர் அணி வெற்றி

2024-12-05

2024 டிசம்பர் 01 ஆம் திகதி தியகம பேஷ் போல் மைதானத்தில் இலங்கை கடற்படை மகளிர் அணியை 18 க்கு 8 புள்ளிகள் என்ற அடிப்படையில் தோற்கடித்து இலங்கை இராணுவ மகளிர் பேஷ் போல் அணி தேசிய லீக் பேஷ் போல் போட்டி - 2024 இன் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.


2024 ஆண்டு ‘பி’ டி20 கிரிக்கெட் போட்டியில் இராணுவ அணி இரண்டாமிடம்

2024-11-23

இலங்கை கிரிக்கெட் கழகத்தினால் நடத்தப்பட்ட ‘பி’ டி20 கிரிக்கெட் போட்டி 2024ல், இராணுவ விளையாட்டுக் கழகம் இரண்டாமிட கிண்ணத்தை பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் போட்டியிட்டன.


இராணுவ படையணிகளுக்கிடையிலான கபடி சாம்பியன்ஷிப் - 2024

2024-11-23

இராணுவ படையணிகளுக்கிடையிலான கபடி சாம்பியன்ஷிப் 22 நவம்பர் 2024 அன்று பனாகொட உள்ள இராணுவ உடற்பயிற்சி பாடசாலையில் நிறைவடைந்தது.


இராணுவ படையணிகளுக்கிடையிலான முய் தாய் போட்டியில் விஜயபாகு காலாட் படையணி வெற்றி

2024-11-12

இராணுவ முய்தாய் கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ படையணிகளுக்கிடையிலான முய் தாய் போட்டி - 2024 பனாகொடை இராணுவ குத்துச்சண்டை உள்ளக விளையாட்டரங்கில் 2024 நவம்பர் 10ம் திகதி 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 167 வீர வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.


நெக்ஸ்ட் ஜென் ஹொக்கி விளையாட்டு தொடரில் இராணுவ ஹொக்கி அணிக்கு சாம்பியன்ஷிப்

2024-11-11

இலங்கை நெக்ஸ்ட் ஜென் ஹொக்கி முன்னேற்ற கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நெக்ஸ்ட் ஜென்’ சாம்பியன்ஷிப் போட்டி தொடர் 2024 நவம்பர் 09 அன்று கொழும்பு செயற்கை ஹொக்கி புல்வெளியில் நடைபெற்றது.


கஜபா படையணி விளையாட்டு சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா

2024-10-31

கஜபா படையணி விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா 27 ஒக்டோபர் 2024 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை கௌரவிக்கும் வகையில் நடாத்தப்பட்டது.


11 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி

2024-10-30

11 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யு. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். கிரிக்கெட் போட்டி 2024 ஒக்டோபர் 21 மற்றும் 29 ஆம் திகதிகளில் 1 வது இலங்கை ரைபிள் படையணி மைதானத்தில் நடைப்பெற்றது.


இராணுவ படையணிகளுக்கு இடையிலான எல்லே சாம்பியன்ஷிப் - 2024 வெற்றிகரமாக நிறைவு

2024-10-29

இலங்கை இராணுவ எல்லே குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவப் படையணிகளுக்கு இடையிலான எல்லே சாம்பியன்ஷிப் – 2024 போட்டி பன்னிரண்டு படையணிகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 2024 ஒக்டோபர் 25 ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுற்றது.


இராணுவ படையணிகளுக்கிடையிலான சதுரங்க சாம்பியன்ஷிப் - 2024

2024-10-26

இராணுவத்தினருக்கிடையிலான செஸ் சாம்பியன்ஷிப் 2024 ஒக்டோபர் 25 ஆம் திகதி பனாகொடவிலுள்ள இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் நிறைவடைந்தது. 14 படையணிகளை சேர்ந்த வீரர்கள், சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்காக மூன்று போட்டிகளில் பங்கேற்று தங்களது சிறப்பான திறன்களை வெளிப்படுத்தினர்.


இராணுவ படையணிகளுக்கு இடையிலான உடற்கட்டமைப்பு, பளு தூக்குதல் மற்றும் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2024 நிறைவு

2024-10-25

இராணுவ படையணிகளுக்கு இடையிலான உடற்கட்டமைப்பு, பளுதூக்குதல் மற்றும் பவர்லிப்டிங் போட்டிகள் – 2024 பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் 2024 ஒக்டோபர் 22 முதல் 24 வரை நடைபெற்றது.