ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இரசாயன கசிவை தடுக்க 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படை குழு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியினால் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் ஏற்பட்ட சந்தேகத்திற்குரிய இரசாயன கசிவை நிவர்த்தி செய்ய ஒரு சிறப்பு இரசாயன படை அனுப்பிவைக்கப்பட்டது. இரசாயன ஆயுத மரபுகளுக்கான தேசிய அதிகார சபையின் (NACWC) தொழில்நுட்ப ஆதரவுடன், 2025 ஜூன் 16 அன்று கொழும்பு தீயணைப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைப்பதற்காகவும், பிரதேசத்தை பாதுகாப்பதற்காகவும் 02 அதிகாரிகள் மற்றும் 12 சிப்பாய்கள் கொண்ட ஓர் இரசாயன குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.