இராணுவ சிறப்பம்சம்
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தினால் கொழும்பில் வருடாந்த பொப்பி அணிவகுப்பு

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் தனது வருடாந்த பொப்பி அணிவகுப்பை 21 டிசம்பர் 2024 அன்று கொழும்பில் காலி முகத்திடலில் ஆரம்பித்து விஹாரமஹா தேவி பூங்கா போர்வீரர் நினைவிடத்தில் நிறைவடைந்தது.
பொறியியல் சேவைகள் பணிப்பாளர் 5வது மற்றும் 11 வது பொறியியல் சேவைகள் படையணிகளுக்கு விஜயம்

பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் 5வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 11 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு 2024 டிசம்பர் 15 மற்றும் 17 ம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டார்.
54 வது காலாட் படைப்பிரிவினால் நத்தார் கரோல் கீதங்கள் – 2024

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மன்னார் நத்தார் கரோல் கீதங்கள் – 2024 நிகழ்ச்சியை 19 டிசம்பர் 2024 அன்று நடத்தினர். மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில், கட்டளைக்கு உட்பட்ட பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் உதவியுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இராணுவம் மற்றும் கடற்படையினரால் மியான்மர் அகதிகள் மீட்பு

முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் கடற் கரையில் 19 டிசம்பர் 2024 அன்று தரையிறங்க முயன்ற 102 மியன்மார் அகதிகளை ஏற்றிச் வந்த படகு இராணுவம் (593 வது காலாட் பிரிகேட் மற்றும் 6 இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி) மற்றும் கடற்படையின் படையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
இலங்கை இராணுவ மகளிர் படையணி படைத்தளபதி 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2024 டிசம்பர் 18 அன்று 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவ மகளிர் படையணி படைத் தளபதி களுஅக்கல விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 17 டிசம்பர் 2024 அன்று களுஅக்கல பிரிவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பதிரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2024 டிசம்பர் 11 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
கெரவலப்பிட்டிய எண்ணெய் முனையத்தில் அவசர தீ ஒத்திகை

141 வது காலாட் பிரிகேட் படைத் தளபதி பிரிகேடியர் ஆர்ஆர்டிஎஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 13 டிசம்பர் 2024 அன்று கெரவலப்பிட்டிய பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் அவசரகால தீயணைப்பு ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இத்திட்டம் 141 காலாட் பிரிகேட் படையினர் மற்றும் சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் அதிகாரிகளின் கூட்டு முயற்சியாகும்.
செவனப்பிட்டிய மாணவர்களின் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் பயணத்திற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆதரவு

செவனப்பிட்டிய மகா வித்தியாலய மாணவி எம்.இனோஷா நவோத்யா, 17 வயதுக்குட்பட்ட, 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தேசிய வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, 2024 ஆண்டு கத்தார் தோஹாவில் 2024 டிசம்பர் 19 - வரை நடைபெறும் ஆசிய இளையோர் மற்றும் கனிஷ்ட பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
இராணுவப் போர்க் கல்லூரி படையினருக்கு குடிநீர் வழங்க நீர் சுத்திகரிப்பு நிலையம்

இராணுவப் போர்க் கல்லூரி படையினருக்கு குடிநீர் வழங்குவதற்காக, இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹெவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 டிசம்பர் 2024 அன்று வளாகத்தில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.