சிவில் பணிகள்
55 வது காலாட் படைப்பிரிவினரால் கிளிநொச்சியில் நத்தார் பண்டிகை

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2024 டிசம்பர் 26 ம் திகதி கிளிநொச்சி நெலும் பியச திரையரங்கில் வருடாந்த நத்தார் கெரோல் நிகழ்வை நடாத்தினர்.
24 வது காலாட் படைப்பிரிவினரால் கல்முனை ஹோலி கிராஸ் தேவாலயத்திற்கு மதிய உணவு

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பதி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 241 வது காலாட் பிரிகேட்டின் பதில் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 23 டிசம்பர் 2024 அன்று கல்முனை 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால், ஹோலி கிராஸ் தேவாலயத்தின் 16 சிறுவர்கள் மற்றும் 5 ஊழியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
12 வது கெமுனு ஹேவா படையணியினரால் நன்கொடை திட்டம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 231 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 23 டிசம்பர் 2024 அன்று பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினர்.
223 வது காலாட் பிரிகேட் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்ஆர் விஜேரத்ன யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் படையினர் 2024 டிசம்பர் 21 திகதி மஹதிவுல்வெவ சிங்கபுர வித்யாவர்தன வித்தியாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர். 6 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எல்பிஎஸ்யூகே லியனகெதர பீஎஸ்சீ அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்விற்கு வீஎஸ்ஐஎஸ் கணினி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.பிரசன்ன விஜேரத்ன அனுசரணை வழங்கினார்.
18 வது விஜயபாகு காலாட் படையணியின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணம் விநியோகம்

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 18 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் தலைமையில் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் சுதுவெல்ல பராக்கிரம மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வை அம்பாறை மஹா வாபி விகாரையில் 17 டிசம்பர் 2024 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
அக்கரைப்பற்று மெதடிஸ்ட் தேவாலயத்தில் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 241 வது காலாட் பிரிகேட் பதில் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 2024 ம் ஆண்டுக்கான நத்தார் பண்டிகை நிகழ்வு 20 டிசம்பர் 2024 அன்று அக்கரைப்பற்று மெதடிஸ்ட் தேவாலயத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம்

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 241 வது காலாட் பிரிகேட் பதில் தளபதியின் மேற்பார்வையில், 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 25 குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு நன்கொடை வழங்கும் நிகழ்வை கண்ணகிபுரம் அக்கரைப்பற்று பாடசாலையில் 2024 டிசம்பர் 21 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி, ஜே/433 முள்ளியான் கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு ஆதரவாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தை டிசம்பர் 23 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
யாழ். மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சைக்கிள்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

513 வது காலாட் பிரிகேட், யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு 50 சைக்கிள்கள், வயோதிப பெண்களுக்கு 25 உலர் உணவுப் பொதிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 25 சத்துணவு பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி 513 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் இஎம்எல்பீ ஏக்கநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.
பளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு போசனைமிகு மதிய உணவு வழங்கல்

பளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 20 டிசம்பர் 2024 அன்று போசனைமிகு மதிய உணவு வழங்கப்பட்டது. 23 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் 23 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈ.ஏ எதிரிசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்த சமூக முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.