பட விவரணம்
இந்த நத்தார் உங்கள் அனைவரையும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செளபாக்கியத்தால் ஆசீர்வதிக்கட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து அனைவருக்கும் நத்தார் மற்றும் பண்டிகைகால வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார். இப்பண்டிகை மகிழ்ச்சி மற்றும் பூரண ஆசிர்வாதங்களை கொண்டுவரட்டும்!
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பெருமைமிகு 99வது விடுகை அணிவகுப்பு

தியத்தலாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் அதன் 99 வது விடுகை அணிவகுப்பில் இராணுவ தளபதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஏ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இலங்கை இராணுவத்திற்கு மேலும் 222 பயிலிளவல் அதிகாரிகளை 2024 டிசம்பர் 21 அன்று பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.
இராணுவ தளபதி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகளின் இறுதி ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு நிகழ்வில் பங்குபற்றல்

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிளிலவல் அதிகாரிகளின் இறுதி ஆய்வு விளக்கக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை தியத்தலாவ சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அவர்களின் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீ அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே கலந்துகொண்டார்.
இராணுவத் தளபதி பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபிஏ ஜயசேகர (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை 9 டிசம்பர் 2024 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இராணுவத் தளபதியுடன் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), அவர்கள் 2024 நவம்பர் 27 அன்று மன்னாரில் நிலவும் சீரற்ற காலநிலையை அவதானிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
2024 ஆயுதப்படை நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வில் ஜனாதிபதி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை முப்படைகளின் சேனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (24) நடைபெற்ற ஆயுதப்படைகளின் நினைவு தினம் – 2024 மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வில் கலந்துகொண்டார். கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள நினைவு தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய மாணவ சிப்பாய் படையணியின் விடுகை அணிவகுப்பு விழாவில் இராணுவ தளபதி

பாடசாலை மாணவர்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் நிர்வகிக்கப்படும் தேசிய மாணவ சிப்பாய் படையணியின் தேசிய மட்ட போட்டிகளான ஹெர்மன் லூஸ் / டி சொய்சா சவால் கிண்ண முகாமின் விடுகை அணிவகுப்பு ரன்டெம்பே தேசிய மாணவ சிப்பாய் பயிற்சி நிலையத்தில் 10 நவம்பர் 2024 இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் உள்ள 4485 பாடசாலை மாணவச் சிப்பாய் குழுக்களில் 60 மாணவ சிப்பாய் குழுக்கள் இறுதி போட்டிகளில் கலந்துகொண்டன.
இன்று 75 வது இராணுவ ஆண்டு நிறைவு தினம்

இன்று 75 வது இராணுவ ஆண்டு நிறைவு தினம்
75 வது இராணுவ ஆண்டு நிறைவுடன் உயிர் தியாக வீரர்களுக்கு நினைவேந்தல்

இலங்கை இராணுவம் தனது 75 வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களின் மகத்தான தியாகங்களை கௌரவிக்கும் முகமாக திங்கட்கிழமை (7) அன்று பத்தரமுல்ல போர் வீரர்களின் நினைவுத் தூபியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
75 வது இராணுவ தினத்தை முன்னிட்டு ஆசீர்வாத நிகழ்வு மற்றும் இராணுவ அணிவகுப்பு தயார்

இலங்கை இராணுவம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளது.