பயிற்சி
அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிறைவு

அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறியானது 26 டிசம்பர் 2024 அன்று கம்பளையில் உள்ள இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட உயர் பாடநெறி இல. 29 நிறைவு விழா

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனம், சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்துடன் இணைந்து மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட உயர் பாடநெறி (சிப்பாய்கள்) இல. 29 ஐ 23 டிசம்பர் 2024 அன்று வெற்றிகரமாக முடித்துள்ளது.
இலங்கை சிங்கப் படையணியினால் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

இலங்கை சிங்க படையணி 19 டிசம்பர் 2024 அன்று அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் யாழ். இந்துக் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மற்றும் புனானை ரிதிதென்ன இக்ராஹ் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி திட்டத்தை நடாத்தியது. இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.
உயர் ஏயார்மொபைல் படையலகு பயிற்சி பாடநெறி இல.03 நிறைவு

5 வது கெமுனு ஹேவா படையணியின் உயர் ஏயார்மொபைல் படையலகு பயிற்சி பாடநெறி இல.03, படையலகு விளக்க்காட்சி மற்றும் நிறைவுரையுடன் 2024 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நிகாவெவ ஏயர்மொபைல் பயிற்சிப் பாடசாலையில் நிறைவடைந்தது.
11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையலகு பயிற்சி பாடநெறி நிறைவு

11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 07 அதிகாரிகள் மற்றும் 295 சிப்பாய்களின் பங்குபற்றலுடன் 2024 ஒக்டோபர் 14 முதல் டிசம்பர் 02 வரை முழங்காவில் உள்ள படையலகு பயிற்சிப் பாடசாலையில் தனது படையலகு பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவு செய்தது.
22 வது கஜபா படையணியின் படையலகு பயிற்சி முதலாம் படை பயிற்சி பாடசாலையில் நிறைவு

22 வது கஜபா படையணியின் படையலகு பயிற்சியானது 2024 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 04 ம் திகதி வரை கட்டுகெலிய முதலாம் படை பயிற்சி பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
காலி எண்ணெய் களஞ்சியத்தில் அவசர தீ ஒத்திகை

இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தில் லிமிடெட் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பணியகம் மாகல்ல பெட்ரோலிய களஞ்சிய முனையத்தில் அவசர தீ பாதுகாப்பு ஒத்திகை 21 நவம்பர் 2024 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 1030 மணி முதல் மதியம் 1230 மணி வரை மொத்த எண்ணெய் சேமிப்பு வசதிகளை உள்ளடக்கிய தீ அல்லது ஏனைய அவசரகால சூழ்நிலையில் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி இடம்பெற்றது.
இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் இளம் அதிகாரிகள் பாடநெறி 13 நிறைவு

இயந்திரவியல் காலாட் படையணியின் ஏழு இளம் அதிகாரிகள் 18 மே 2024 முதல் 12 நவம்பர் 2024 வரை பெரியகாடு இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவின் போது இளம் அதிகாரிகள் பாடநெறி 13 யினை நிறைவு செய்து இயந்திரவியல் காலாட் படையணியில் இணைந்து கொண்டனர்.
24 வது காலாட் படைப்பிரிவினருக்கு அவுட்போர்ட் மோட்டார் படகு பயிற்சி

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலில் இலங்கை கடற்படையினரால் 12 நவம்பர் 2024 அன்று ஒலுவில் துறைமுகத்தில் ஒரு நாள் சிறப்பு அவுட்போர்ட் மோட்டார் படகு பயிற்சி நடாத்தப்பட்டது.
யக்கல ரணவிரு ஆடைத் தொழிற்சாலைக்கு வழங்கல் பணிநிலை பாடநெறி எண். 10 இன் கல்விச் சுற்றுலா

வழங்கல் பணிநிலை பாடநெறி எண். 10 இன் இருபத்தைந்து மாணவர் அதிகாரிகள், 30 ஒக்டோபர் 2024 அன்று, வழங்கல் செயல்பாடுகள் தொடர்பான நடைமுறை புரிதலை மேம்படுத்துவதற்காக, யக்கல ரணவிரு எப்பரல் ஆடைத் தொழிற்சாலைக்கு தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக விஜயம் மேற்கொண்டனர்.