சேவை வனிதையர்

Clear

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் புத்தக நன்கொடை

2024-12-23

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு தனது வருடாந்த புத்தக நன்கொடை நிகழ்ச்சியை 20 டிசம்பர் 2024 அன்று படையணி தலைமையகத்தில் நடாத்தியது.


இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரால் நத்தார் கரோல் கீத நிகழ்ச்சி

2024-12-13

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனிஷா கொத்தலாவல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ பொலிஸ் பாடசாலை மற்றும் 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி இணைந்து கிரித்தலே இலங்கை இராணுவ பொலிஸ் பாடசாலையில் 7 டிசம்பர் 2024 அன்று நத்தார் கரோல் கீத நிகழ்ச்சியை நடாத்தியது.


விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அபிமன்சல நலவிடுதிக்கு விஜயம்

2024-12-13

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் மேற்பார்வையில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2024 டிசம்பர் 11 அன்று குருநாகல், பாங்கொல்ல, அபிமன்சல-3 நல விடுத்க்கு விஜயம் மேற்கொண்டனர்.


பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையரால் பாடசாலை பைகள் நன்கொடை

2024-12-11

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 15 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி, பொறியியல் சேவைகள் படையணியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை பைகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை 7 டிசம்பர் 2024 அன்று 15 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியில் நடாத்தியது.


விசேட படையணி சேவை வனிதையரால் செயற்கை கால்கள் மற்றும் மூக்குகண்ணாடிகள் தானம்

2024-11-26

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் ஆலோசனையில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் கொழும்பு நட்புறவு சங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு சுபெம் டி சில்வா அவர்களின் ஒத்துழைப்பில், 2024 நவம்பர் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் மடவளை உள்பத்த, சந்திர பிம்பராமய விகாரை வளாகத்தில் யட்டவத்தை, பொதுமக்களுக்கான செயற்கை உறுப்புகள், மற்றும் மூக்குகண்ணாடிகள் வழங்கும் நன்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

2024-11-08

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினர், 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியுடன் இணைந்து, கரந்தெனிய 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி கேட்போர் கூடத்தில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தக நன்கொடையை 2024 ஒக்டோபர் 26 ஆம் திகதி வழங்கினர். இந்த நன்கொடை திட்டம் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி பணியாளர்களின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் (க.பொ.த) சாதாரண தர பரீட்சைகளில் சாதனை படைத்த பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.


விசேட படையணி சேவை வனிதையரால் படையினர் மற்றும் அவர்களது துணைவியருக்கு மருத்துவ பரிசோதனை

2024-11-04

விசேட படையணி சேவை வனிதையர் பிரிவினர் நாவுல பொது மருத்துவமனையுடன் இணைந்து, விசேட படையணி முகாம் வளாகத்தில் 2024 நவம்பர் 01 அன்று படையினர் மற்றும் அவர்களது துணைவியார்களுக்கு மருத்துவ பரிசோதனையை நடாத்தினர்.


கொமாண்டோ படையணி சேவை வனிதையரின் சிறுவர் தின கொண்டாட்டம்

2024-10-15

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு 2024 ஒக்டோபர் 5 ம் திகதி கொமாண்டோ படையணி குடும்பங்களின் பிள்ளைகளுடன் கொமாண்டோ படையணி நீச்சல் தடாக கட்டிடத்தில் தொடர் நிகழ்வுகளுடன் சிறுவர் தினத்தினை கொண்டாடியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்கள் கலந்து கொண்டார்.


இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரின் சிறுவர் தின மற்றும் முதியோர் தின கொண்டாட்டம்

2024-10-10

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிறுவர் தின நிகழ்ச்சி கட்டுநாயக்க, 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியில் 06 ஒக்டோபர் 2024 அன்று நடைபெற்றது. 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்.ஏ. உடரட்டகே மற்றும் அவரது துணைவியார் திருமதி சந்திமா உடரட்டகே ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.


இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையரால் பனாகொடையில் கலைக் கண்காட்சியுடன் சிறுவர் தின கொண்டாட்டம்

2024-10-10

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு உலக சிறுவர் தினத்தை 2024 ஒக்டோபர் 4 ஆம் திகதி பனாகொடை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் கலைக் கண்காட்சியுடன் கொண்டாடியது. இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.