செய்தி சிறப்பம்சங்கள்

Clear

இராணுவ தளபதி கமாண்டோ பயிற்சி பாடசாலையின் புதிய நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயத்தை திறந்து வைப்பு

2024-12-20

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 19 டிசம்பர் 2024 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் நம்பிக்கை பயிற்சி வலயத்தை திறந்து வைத்துடன் இது குடாஓயா கமாண்டோ பயிற்சி பாடசாலையில் கமாண்டோ படையணியின் பயிற்சி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த வசதி இராணுவத்தின் நவீனமயமாக்கல் முயற்சிகளையும் குறிக்கிறது, ஏனெனில் இது இலங்கை இராணுவத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் புதுமையானது இது பிராந்திய மட்டத்தில் கூட அரிதாகவே காணப்படுகிறது.


சிவனொளிபாதமலை யாத்திரை மத சடங்குகளுடன் ஆரம்பம்

2024-12-19

டிசம்பர் முதல் மே வரையிலான வருடாந்த புனித பயணத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், உடுவப் பெளர்ணமி தினத்தன்று சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பமானது. இரத்தினபுரி, கல்பொத்தவல சிவனொளிபாதமலை ரஜ மகா விஹாரையில் புனித தாது மற்றும் சுமன சமன் சிலை பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட சமய சடங்குகளுடன் இவ்வருட நிகழ்வு ஆரம்பமானது.


புனித லூசியா பேராலயத்தில் இராணுவ நத்தார் கரோல் கீதங்கள் - 2024

2024-12-18

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பாராட்டுக்களை பகிர்ந்து கொள்வதற்கும் அக்கறை செலுத்துவதற்கும் இலங்கை இராணுவம் தனது வருடாந்த பங்களிப்பைச் வழங்கியுள்ளது. புனித நிகழ்வைக் குறிக்கும் வகையில், இராணுவம் 17 டிசம்பர் 2024 அன்று கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் தனது வருடாந்த நத்தார் கரோல் சேவையை நடத்தியது.


பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி எண் - 18 பட்டமளிப்பு விழாவில் இராணுவ தளபதி

2024-12-13

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 12 டிசம்பர் 2024 அன்று தாமரை தாடக திரையரங்கில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி எண்-18 இன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீ அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


இராணுவ தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் இணைந்து அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம்

2024-11-29

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 நவம்பர் 28 அன்று அம்பாறை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவத்தின் அனர்த்த நிவாரணப் பணிகளை மதிப்பிடுவதற்காக விஜயம் செய்தார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினருக்கு காப்புறுதி திட்டம்

2024-11-28

இலங்கை இராணுவ தொண்டர் படையணி இலங்கை காப்புறுதிக் கூட்டுதாபனத்துடனான தனது தனது ஒத்துழைப்பை புதுப்பித்து, அதன் உறுப்பினர்களுக்கு காப்புறுதி பலன்களை வழங்குவதற்காக "விருசவிய" என்ற புதிய ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது. 28 நவம்பர் 2024 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் 01 டிசம்பர் 2024 முதல் 30 நவம்பர் 2025 வரை அமுலில் இருக்கும்.


பிரதி பாதுகாப்பு அமைச்சர் கடமை பொறுப்பேற்பு

2024-11-27

மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ பிரதி பாதுகாப்பு அமைச்சராக 25 நவம்பர் 2024 அன்று கொழும்பு - 07, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.


இராணுவத் தளபதிக்கு இராணுவ வழங்கலின் முக்கிய மதிப்புகள் வெளியீட்டின் முதல் நகல்

2024-11-26

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் திங்கட்கிழமை (25) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது புதிதாக தொகுக்கப்பட்ட இராணுவ வழங்கல் முக்கிய மதிப்புகள் வெளியீட்டின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இராணுவ வழங்கல் படையணியினால் தயாரிக்கப்பட்ட வெளியீடு, இராணுவத்தில் வழங்கல் செயல்பாடுகளுக்கு வழிகாட்டும் முக்கிய மதிப்புகளை வலுப்படுத்தவும் தரப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இராணுவக் குறியீடு எண்: 0409 A1 ஐக் கொண்ட வழங்கல் முக்கிய மதிப்புகள் வெளியீடு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டது.


ஓய்வுபெறும் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2024-11-26

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் 25 நவம்பர் 2024 அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். 36 வருட கால சிறப்புமிக்க சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.


இராணுவ தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மூன்றாம் குழுவின் பட்டமளிப்பு விழாவில் பங்குபற்றல்

2024-11-19

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மூன்றாம் குழு மாணவர்களுக்கு 18 நவம்பர் 2024 அன்று கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பட்டதாரி கற்கைகள் பீட கேட்போர் கூடத்தில் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.