யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், சிமிக் பூங்கா வளாகத்தில் 2025 ஜனவரி 14 ம் திகதி செல்வபுரம் மற்றும் யோகபுரத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.