சிவில் பணிகள்

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.கே.எஸ்.பீ.எம்.ஆர்.ஏ.பி. தொடம்வல பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 10வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.எச். சுதுசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2025 பெப்ரவரி 04 ம் திகதி மணல்காடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 10வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் மரம் நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் 141 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 6 வது பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் என்சீ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஸ்பீ பீஎஸ்சீ மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் வைடிஎன் டி சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், அத்தனகல்ல "செவன" முதியோர் இல்லம் மற்றும் "இசுரு" சிறுவர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் 2025 பெப்ரவரி 04ம் திகதி படையினரால் முன்னெடுக்கப்பட்டன.


77வது தேசிய சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு இணங்க, "தூய இலங்கை" திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் கடற்கரை மற்றும் சாலை சுத்தம் செய்யும் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


77வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கிழக்கு பாதுகாப்புப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 பெப்ரவரி 4ம் திகதி பொலன்னறுவை பெரகும் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டத்தை படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படையின் திட்ட அதிகாரி பிரிகேடியர் டபிள்யூ.எஸ்.ஆர். குமார யூஎஸ்பீ ஐஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது கெமுனு ஹேவா படையணி, வனவிலங்கு பாதுகாப்புத் துறை (பிம்புரத்தேவ வனவிலங்கு அலுவலகம்) மற்றும் மகாவலி அதிகாரிகள் இணைந்து 21 காட்டு யானைகளை வீரலந்த குளத்திலிருந்து மதுரு ஓயா தேசிய பூங்காவிற்கு 2025 பெப்ரவரி 1 ஆம் திகதி இடமாற்றம் செய்தனர்.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "தூய இலங்கை" திட்டம் மற்றும் தாய்நாட்டை அழகுபடுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இணைந்து, 8 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி 2025 ஜனவரி 30 ஆம் திகதி பின்னவல யானைகள் சரணாலய வளாகத்தில் மரக்கன்று நடும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.


‘தூய இலங்கை திட்டத்தின்’ ஒரு பகுதியாக, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் 2025 ஜனவரி 30 ம் திகதி சிரமதான திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டம் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், வடமேற்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பின் கீழ், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 ஜனவரி 28 ஆம் திகதி குருநாகல் புகையிரத நிலையத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். “தூய இலங்கை” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.


மத்திய மாகாண பொறியியல் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தலைமைத்துவம், நேர்மறை சிந்தனை மற்றும் ஆளுமை மேம்பாடு பற்றிய விரிவுரையை 2025 ஜனவரி 28 ஆம் திகதி பொறியியல் சேவைகள் திணைக்கள வளாகத்தில் நடாத்தினார்.


சிவில் சமூகத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான இராணுவத் தளபதியின் நோக்கத்திற்கு அமைய , கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில் 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் அரந்தலாவாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தின் வீடு கட்டும் திட்டத்திற்கான அடி கல்லை நாட்டினர்.