சிவில் பணிகள்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தொடங்கப்பட்ட ‘ தூய இலங்கை” திட்டத்தின்’ ஒரு பகுதியாக, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில், 51வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஏஸ்சீ அவர்களின் மேற்பார்வையில், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் துப்புரவு திட்டம் 2025 ஜனவரி 21 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 22ம் திகதி அன்று பண்டாரகம, வல்கமாவில் செல்வி எம். நிலுஷா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அதிகாரப்பூர்வமாக கையளிப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டார்.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினர் 2025 ஜனவரி 21 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கிறிஸ்து தேவாலயத்தின் பாலர் பாடசாலை கட்டிடத்தின் கட்டுமானத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.


11 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இஜீஜேபீ எதிரிசிங்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் கிருதேவி இந்து தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சிவபிரகாஷ் பாடசாலையின் 125 மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடையாக வழங்கும் திட்டத்தை 2025 ஜனவரி 18, அன்று முன்னெடுத்தனர்.


24 வது காலாட் படைப்பிரிவின் 241 வது காலாட் பிரிகேடின் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், 2025 ஜனவரி 19 அன்று சேதமடைந்த வீரையடி குளத்தை வெற்றிகரமாக சீரமைத்தனர். மேலும் மண்அரிப்பு மற்றும் சேதத்தைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் படையினர் மண் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த உடனடி நடவடிக்கையானது சுற்றியுள்ள சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க உதவியது.


221 வது காலாட் பிரிகேட் படையினரால், திருகோணமலை, சாகரபுரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசிய பாட புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் 2025 ஜனவரி 16 அன்று வழங்கப்பட்டது.


21 வது காலாட் படை படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிஎபீஎம் பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், சீரற்ற காலநிலையால் சிறிதளவு சேதமடைந்த கல்குளம் மஹானொச்சிகுளம் குள கரையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி உடனடியாக தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.


2025 ஜனவரி 19 அன்று சீரற்ற வானிலை காரணமாக கெபிதிகொல்லாவ, எல்லேவெவவில் இரண்டு கிராமவாசிகள் சிக்கித் தவித்தனர். 5 வது (தொ) கஜபா படையணி படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து உடனடி உதவியை வழங்கினர்.


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது 'தூய இலங்கை' தேசிய திட்டம் செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2025 ஜனவரி 14 ஆம் திகதி 51 வது காலாட் படைப்பிரிவின் சிமிக் பூங்காவில் நடைபெற்ற யாழ்ப்பாணத்தில் பொங்கல் கொண்டாட்டம் – 2025 நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மேஜர் ஜெனரல் எம்.பி.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, இராணுவ வீரர்களையும் உள்ளூர் சமூகங்களையும் ஒன்றிணைத்து முக்கியமான கலாசாரம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வில் கொண்டாடுகிறது.