சிவில் பணிகள்

11 வது காலாட் படைப்பிரிவின் 641 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீ.கே வருவங்கொடகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான நன்கொடை திட்டத்தை 2025 ஜனவரி 21 ஆம் திகதி தம்புள்ள கிரலகொல்ல ஆரம்ப பாடசாலையில் நடாத்தினர்.


மொனராகலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 18 வது கெமுனு ஹேவா படையணி படையினர், கரகஹவெல கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணைந்து, 2025 ஜனவரி 26 அன்று பிபில,அலவத்த கும்புர குளக்கட்டு அரிப்பை தடுத்தனர்.


மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி அவர்கள், கிழக்கு மாகாண ஆயர், வண. கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆயர் அவர்களை 2025 ஜனவரி 22 ஆம் திகதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வெலிகந்த பாலர் பாடசாலையின் 60 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய கற்றல் பொருட்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு 2025 ஜனவரி 26 ம் திகதி இடம் பெற்றது.


இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 7வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில், "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 25 அன்று நாவல்லடி முதல் ரிதிதென்ன வரையிலான ஏ11 (மட்டக்களப்பு முதல் பொலன்னறுவை வரை) பாதையில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.


பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒப்புதலின் கீழ் இலங்கை இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 9 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினர், குருநாகல் மாவட்ட மெல்சிரிபுர பன்சியகம கிராமிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.


நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, தென்னியன்குளம் குளக்கரையின் நிரம்பி வழியும் இடம் சிறிது சேதமடைந்துள்ளது. இதனால் வரவிருக்கும் பேரழிவை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில், 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஏகே ஹேவாபதகே அவர்களின் மேற்பார்வையில் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2025 ஜனவரி 19 அன்று சீரமைப்பு பணிகளை முன்னெடுத்தனர்.


2025 ஜனவரி 19 அன்று ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கிராமவாசிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்ததை தொடர்ந்து 232 வது காலாட் பிரிகேட்டின் 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் தீவிரமாக செயற்பட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பையும் உடனடி உதவியையும் வழங்கினர்.


“தூய இலங்கை” திட்டத்திற்கு அமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், அபிமன்சல-II நலவிடுதியின் படையினர் 2025 ஜனவரி 21 ஆம் திகதி வில்பிட்டவத்த பாதையில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.


அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'தூய இலங்கை திட்டத்தின்' ஒரு பகுதியாக, யாழ். பாதுகாப்புப் படை தலைமையக படையினயினரால் தூய்மையக்கல் நிகழ்வென்று யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் தலைமையில் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வீ.டி.எஸ். பெரேரா அவர்களின் மேற்பார்வையில் 2025 ஜனவரி 22 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது.