புதிய வலைத்தளம் குறித்து நித்தம் கேட்கப்படும் கேள்விகள்
இலங்கை இராணுவத்தில் இணைய, தனிநபர்கள் சேர்க்கை வகையைப் பொறுத்து குறிப்பிட்ட தகுதியை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும் (பயிலிளவல் அதிகாரி, சிப்பாய், தொண்டர் படை,). பொதுவாக, விண்ணப்பதாரர்கள் இலங்கை குடிமக்களாக இருத்தல் வேண்டும், வயது மற்றும் கல்வித் தகைமையை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். மேலும் உடற்தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனைகளில் தேர்ச்சி பெறுதல் வேண்டும்.
விண்ணப்ப செயல்முறை
- இராணுவ வலைத்தளத்திலும் தேசிய செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்ட பொது ஆட்சேர்ப்பு அறிவிப்புகளுக்கு பதிலளித்தல்.
- அறிவுறுத்தல்களின்படி நிகழ்நிலை அல்லது நேரடியாக விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்.
- எழுத்து பரீட்சைகள், நேர்முகப் பரீட்சை மற்றும் உடற்தகுதித் தேர்வுகளில் பங்கேற்றல்.
- மருத்துவ பரிசோதனை மற்றும் பின்னணி சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுதல்.
சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் விரிவான தேவைகளுக்கு, எதிர்கால விண்ணப்பதாரர்கள் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.army.lk இல் "எங்களுடன் இணையுங்கள்" பக்கத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெள்ளம், மண்சரிவு, வறட்சி மற்றும் ஏனைய அவசரநிலைகள் போன்ற தேசிய பேரழிவுகளுக்கு பதிலளிப்பதில் இலங்கை இராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படையினரையும் வளங்களையும் விரைவாக அனுப்புதல்.
- மீட்பு நடவடிக்கைகள் மற்றும் வெளியேற்றங்களை மேற்கொள்ளல்
- மருத்துவ உதவி, போக்குவரத்து மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்குதல்.
- தடைபட்ட வீதிகளை சுத்தம் செய்தல், அடிப்படை சேவைகளை மீட்டெடுத்தல் மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபடுதல்.
ஒருங்கிணைந்த மற்றும் திறமையான அனர்த்த முகாமையினை உறுதி செய்வதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஏனைய இராணுவ நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் சிவில் அதிகாரிகளுடன் இராணுவம் ஒருங்கிணைந்து செயல்படுதல்
இலங்கை இராணுவம், தேசிய அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு வகையான சிவில்-இராணுவ ஒத்துழைப்பு (CIMIC) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றில் பின்வருவன அடங்கும்:
- பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மதஸ்தலங்கள் போன்றவற்றில் உட்கட்டமைப்புகளை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல்.
- இலவச மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் மற்றும் கல்வி கருத்தரங்குகளை நடாத்துதல்.
- பல்வேறு நன்கொடையாளர்களின் ஆதரவுடன், வறிய சமூகங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல்.
- போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு ஆதரவளித்தல்.
- மரம் நடுதல் மற்றும் சுத்தம் செய்தல் திட்டங்கள் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களில் பங்கேற்றல்.
- தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை இராணுவத்தின் பங்கு என்ன? வெளி மற்றும் உள்ளக அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது இதில் அடங்கும். தேசத்தின் நலன்கள், மக்கள், சொத்துக்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதும் இதில் அடங்கும். உள்நாட்டு பிரச்சினைகளின் போது சிவில் நிர்வாகத்திற்கு உதவுதல், சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் இயற்கை பேரழிவுகளின் போது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.