4 வது விஜயபாகு காலாட் படையினரால் கடற்கரை சுத்தம் செய்யும் பணி

இந்திய கடற்பகுதியில் எம்எஸ்சீ ஈஎல்எஸ்ஏ 3 கப்பல் கவிழ்ந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் கடற்பகுதியில் 4 வது விஜயபாகு காலாட் படையலகின் படையினர், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வேண்டுகோளிற்கு இணங்க ஆய்வு மற்றும் சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.

குப்பைகள் மற்றும் எண்ணெய் கசிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் 2025 ஜூன் 13 முதல் 17 வரை மேற்கொள்ளப்பட்டது.