7 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

7 வது இலங்கை சிங்க படையணி படையினர் 2025 ஜூன் 16 ஆம் திகதி ஆறுமுத்து புதுகுளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில், ஆறுமுத்து புதுகுளம் கிராமத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்வை நடாத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, தேவையுடைய குடும்பங்களுக்கு 20 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி 7 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.கே.டி.பீ.பீ.கே. கங்கானி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.