சிவில் பணிகள்

7 வது கெமுனு ஹேவா படையணி படையினர் புனானி பகுதியில் ஒரு தேவையுடைய குடும்பத்திற்கு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் புதிய வீட்டைக் கட்டி 2025 ஜூன் 29 அன்று வழங்கினர்.


2025 ஜூன் 30 முதல் ஜூலை 06 வரை கல்னேவ வித்யாதர விகாரையில் நடைபெறவிருக்கும் இலங்கை ராமண்ணா மகா நிகாயவின் 74 வது உபசம்பத்தா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ 2025 ஜூன் 24 அன்று கள விஜயம் மேற்கொண்டார்.


9 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 24, அன்று சிறிமங்கலபுரம் கந்தளாய் காமினி ஆரம்ப பாடசாலையில் 46 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் நூலகப் புத்தகங்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவப் படையினர் 2025 ஜூன் 20 முதல் 2025 ஜூலை 04 வரை உகந்தையில் இருந்து கதிர்காமம் வரை வருடாந்த பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.


11 வது (தொ) இலங்கை சிங்க படையணி கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2025 ஜூன் 23 ஆம் திகதி கொக்கடிச்சோலையில் மதிய உணவு மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை நடாத்தியது. 243 வது காலாட் பிரிகேட் தளபதி இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.


51 வது காலாட் படைப்பிரிவு, 512 வது காலாட் பிரிகேட் மற்றும் 14 வது கஜபா படையணி ஆகியவற்றின் படையினர், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் நமசிவாய வித்தியாலயத்தில் நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.


241 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் கீழ் இயங்கும் 11 வது (தொ) சிங்க படையணி 2025 ஜூன் 18 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் பாடசாலை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.


அமைதி மற்றும் ஒற்றுமைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவுகூரும் வகையில், 51 வது காலாட் படைப்பிரிவின் 511 வது காலாட் பிரிகேட் 2025 ஜூன் 14 ஆம் திகதி கோப்பாய் கருணாலயம் சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களை உள்ளடக்கிய ஒரு சமூக சேவைத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.


தேசிய "தூய இலங்கை" திட்டத்திற்கு ஆதரவாக, 213 வது காலாட் பிரிகேடின் 2 வது (2 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையினர் 2025 ஜூன் 20 ஆம் திகதி ஈரற்பெரியகுளம் கிராம ஆயுர்வேத மருத்துவமனையில் தூய்மையாக்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.


"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு இணங்கவும், 59 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் 2025 ஜூன் 21 ஆம் திகதி சிரமதான திட்டத்தை மேற்கொண்டனர். இந்த முயற்சி 592 வது காலாட் பிரிகேடினால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒட்டுசுட்டானில் உள்ள சிவன் கோவிலில் நடைபெறவிருக்கும் வருடாந்த விழாவிற்கு தயாராகும் வகையில் வளாகத்தை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தியது.