18th June 2025
தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 5வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் முல்லைத்தீவு சண்முகரத்னம் தமிழ் பாடசாலை மற்றும் ஒலுமடு தமிழ் பாடசாலையில் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டனர். மேலும் 59வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பாட்டு பாடசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கோபிகிருஷ்ணன் அறக்கட்டளையின் வைத்தியர் அரியதன் கோபிகிருஷ்ணா மற்றும் வன்னி உதவி அமைப்பின் திரு லாரன்ஸ் ஜோன்பிள்ளை ஆகியோரால் இந்த திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டன. மேலும் மேஜர் ஜெனரல் ரவி ரத்தன்சிங்கம் (ஓய்வு) அவர்கள் இத்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பு வழங்கினார்.