23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 ஜூன் 14 ம் திகதி முகமாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் பிள்ளைகளுக்கு நன்கொடை மற்றும் கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
தேசத்தின் பாதுகாவலர்
23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 ஜூன் 14 ம் திகதி முகமாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் பிள்ளைகளுக்கு நன்கொடை மற்றும் கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
513 வது காலாட் பிரிகேட் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 09 அன்று கருகம்பனை கலாசார மண்டபத்தில் இரத்த தான திட்டத்தை முன்னெடுத்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 211வது காலாட் பிரிகேட், 9வது கஜபா படையணி மற்றும் 5வது (தொ) கஜபா படையணி படையினர், 2025 ஜூன் 07 அன்று பதவிய மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வின் போது தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர். கொழும்பு ரோயல் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, அவர்களின் 46 வது வருடாந்த இரத்த தான நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை முன்னெடுத்தனர்.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எம்.பீ.டபிள்யூ.டபிள்யூ.பி.ஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 213 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீ.எம். டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஈரற்பெரியகுளம் ஸ்ரீ சைலபிம்பாராமய விகாரையில் 2025 ஜூன் 08 ஆம் திகதி "தூய இலங்கை" திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சிவில் பொறுப்பு மற்றும் மனிதாபிமான சேவையின் பாராட்டத்தக்க விடயமாக 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி 2025 ஜூன் 09 ஆம் திகதி இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
593 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜூன் 12 ஆம் திகதி சுதந்திபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, 6 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் முல்லைத்தீவு சுதந்திபுரத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 150 தென்னம் பிள்ளைகள் வழங்கப்பட்டன.
குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை பொருட்கள் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை முதலாம் படையின் படையினர் 2025 ஜூன் 11 ஆம் திகதி கிளிநொச்சி, திருவள்ளூர் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
1 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் 2025 ஜூன் 10 ஆம் திகதி லோலுவகொட ஏழைக் குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டின் கட்டுமானப் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.
2025-06-13
ஹங்வெல்ல, கலுஅக்கலவில் வசிக்கும் தேவையுடைய ஒருவருக்கு 2025 ஜூன் 11, அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது. திரு. எஸ்.ஏ. இஷான் பெரேராவின் நிதியுதவி மூலம் கட்டுமானம் சாத்தியமானதுடன் 1 வது புலனாய்வுப் இலங்கை கவச வாகன படையணியின் படையினர் இந்தத் திட்டத்திற்கு பணியாளர் உதவியை வழங்கினர்.
2025 ஜூன் 10 ஆம் திகதி கூரகல பிரிதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் துரிதமாக செயல்பட்டனர். தீயை கட்டுப்படுத்தவும், அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும் படையினர் செயற்பட்டனர்.