10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் இரத்த தான திட்டம் ஏற்பாடு

வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 16 ஆம் திகதி பாலிநகர் முகாம் வளாகத்தில் இரத்த தானத் திட்டத்தை நடாத்தினர். 561 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்.எஸ்.பீ பண்டார யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.என்.டி டி சொய்ஸா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.