18th June 2025
"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு ஆதரவாக, 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் 2025 ஜூன் 15 ஆம் திகதி சிப்பியாறு புனித அன்னம்மாள் தேவாலயத்தில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
புனித அன்னம்மாள் தேவாலயத்தின் தலைமை பாதிரியார் வண. அருட் தந்தை பீட்டர் லோரன்ஸ் லியோன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.