சிவில் பணிகள்

புத்தூர் கதிரவெளி சரஸ்வதி பாலர் பாடசாலை, புதூர் கிராமத்தைச் சேர்ந்த 41 மாணவர்களுக்கு ஆரம்பகால கல்வியை வழங்குகிறது. மாகாண சபையின் கீழ் இயங்கினாலும், மேசை கதிரைகள் மற்றும் நீர் அமைப்புகளுடன் கூடிய சரியான சுகாதார வசதிகள், கட்டிட பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு சமையலறை போன்ற அத்தியாவசிய வளங்களைப் பெறுவதில் பாலர் பாடசாலை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது. 16 ஆண்டுகாலப் பணி அனுபவம் கொண்ட ஒரு பெண் ஆசிரியர் உட்பட மூன்று அர்ப்பணிப்புள்ள கற்பித்தல் ஆசிரியர்கள், பல மாணவர்களை உயர்கல்விக்கு வளர்ப்பதிலும் தயார்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.


541 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர், 2025 பெப்ரவரி 24 அன்று மாந்தையில் உள்ள திருக்கேஸ்வரம் கோவிலில் பொதுமக்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் திட்டத்தை நடத்தினர்.


யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி ஆகியோரின் வழிகாட்டலில் 522 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 பெப்ரவரி 23 அன்று பளை மருத்துவமனையில் இரத்த தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் 2025 பெப்ரவரி 23 அன்று பூநகரின் மற்றும் ஆனையிறவில் “ஒரு அழகான கடற்கரைப் பாதை மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்” எனும் கருப்பொருளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


தூய இலங்கை திட்டத்தில், மன்னார் மாவட்ட பொதுமக்கள் 2025 பெப்ரவரி 23 அன்று 24 கடலோரப் பகுதிகளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்புப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 57 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 பெப்ரவரி 20 அன்று நாரம்மல ருவங்கிரி மத்திய கல்லூரியில் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் தூய்மையாக்கல் திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு 57 வது காலாட் படைபிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.


வரவிருக்கும் நோன்பு காலத்திற்கு தயாராகும் முஸ்லிம் சமூகத்தை ஆதரிப்பதற்காக, ஹப்புத்தளை, தியத்தலாவை மற்றும் கஹகொல்ல ஜும்மா பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழங்களை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 24 அன்று முன்னெடுத்தனர்.


யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களுடைய வழிகாட்டுதலின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டம் பூநகரின் ஸ்ரீ விக்னேஸ்வரம் கல்லூரியில் 2025 பெப்ரவரி 20 அன்று முன்னெடுக்கப்பட்டது.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் ‘தூய இலங்கை’ திட்டத்தின் முதல் கட்டமாக, 2025 பெப்ரவரி 20, அன்று படையினர் பாடசாலை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.


தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக படையினர் மேஜர் ஜெனரல் பீ.ஆர் பதிரவிரத்ன யூஎஸ்ஏடப்ளியூசீ அவர்களின் பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 2025 பெப்ரவரி 20 அன்று பாடசாலை தூய்மையக்கல் மற்றும் புனரமைப்பு திட்டத்தை முன்னெடுத்தனர்.