விஷேட படையணியின் ‘முன்னாள் வீரர்களின் ஒன்றுகூடல்’ 2023 டிசம்பர் 9 – 10 ம் திகதிகள் விஷேட படையணியின் 27வது படையணி தினத்துடன் இணைந்து நாவுல விஷேட படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
முன்னாள் படை வீரர்களின் பக்கம்

கஜபா படையணியின் முன்னாள படைவீரர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (26) பத்தரமுல்லை ‘அபேகம’ வளாகத்தில் படையணியின் சிரேஷ்ட முன்னாள் படைவீர்ரகளின் ஒன்றுகூடலுடன் இடம்பெற்றது.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
22 நிர்வாக மாவட்டங்களின் ரணவீரு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பாதுகாப்பு படைத் தலைமையக பொறுப்பதிகாரிகள் மற்றும் சிவில் விவகார அதிகாரிகள் உட்பட சுமார் 100 பேர் இன்று (18) படைவீரர்கள் விவகார பணிப்பகத்தின் ஏற்பாட்டில் இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தனர். இதன் பேபாது மரியாதைக்குரிய சமூக அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளல், தேசிய பொருளாதாரம் மற்றும் இராணுவத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்தல் , சட்ட விரோத விடயங்களில் பலியாதல் மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தினால் (SLESA) ஒவ்வொரு வருடமும் அனுஸ்டிக்கப்படும் ‘நினைவு நாள்’ மற்றும் பொப்பி விழா இன்று (11) காலை கொழும்பு 7, விகாரமஹா தேவி பூங்காவில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ. கரு ஜயசூரிய இந்த நினைவேந்தல் கலந்து கொண்டு உலக யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி அராலி முனையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிக்கு இலக்காகி இலங்கை இராணுவத்தின் பல துணிச்சலான அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் பலியான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 25 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (7) மற்றும் செவ்வாய்க்கிழமை (8) தொடர்ச்சியான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கை இராணுவத்தின் கஜபா படையணி உருவாக்கிய தலைசிறந்த போர் வீரர்களில் ஒருவரான மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் 25வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (6) அனுராதபுரம் சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இராணுவத்தின் கடந்த கால தடகளத் துறையில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களில் ஒருவரும், தற்போது ஓய்வு பெற்றவருமான தேசபந்து லெப்டினன்ட் கேணல் டபிள்யூ விமலதாச (ஓய்வு) அவர்கள் அல்வ்வ ஆண்டியதெனியவில் முழுமையாகப் புனரமைக்கப்பட்ட தனது வீட்டின் சாவியை புதன் கிழமை (31) லெப்டினன்ட் கேணல் தேசபந்து டபிள்யூ விமலதாச (ஓய்வு) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களையும், வெள்ளிப் பதக்கங்களையும் வென்று, பதக்கச் சாதனையைப் பெற்று இராணுவத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்திய மூத்த வீரராக நாடளாவிய ரீதியில் உள்ள விளையாட்டு வீரர்களின் இதயங்களில் நன்கு பதிந்துள்ளார்.
கெமுனு ஹேவா படையணியின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் (GWESRA) வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) ஞாயிற்றுக்கிழமை (26) குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் (GW) சங்கத்தின் பெருந்தொகையான உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. குருவிட்ட முகாமின் நுழைவாயிலில் முன்னாள் படைவீரர்கள் சங்க GWESRA உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டதுடன், படையணி படைவீரர் நினைவுத் தூபிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு 2009 க்கு முன் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உயர் தியாகத்தைச் செலுத்திய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
கட்டான, பொலகலவில் அமைந்துள்ள முப்படை வீரர்களுக்கான புனரமைக்கப்பட்ட இல்லத்தில் பல வசதிகளைக் கொண்ட கட்டிடம் இன்று (20) முற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களுடன், முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.
30 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய பிரிகேடியர் கேஜேஎன் சேனாவீர (ஓய்வு) ஆர்எஸ்பீ யுஎஸ்பீ எல்டிஎம்சி அவர்களின் இராணுவ இறுதிக் கிரியைகள், அவரது இராணுவத் தோழர்கள் மற்றும் ஏனையவர்களின் மத்தியில் புதன்கிழமை (4) மாலை பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.