2 வது கஜபா படையணியினால் உலர் உணவு மற்றும் மதிய உணவு பொதிகள் நன்கொடை திட்டம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ் 2 வது கஜபா படையணி, உலர் உணவு மற்றும் மதிய உணவு பொதிகள் வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தியது.

இந்த நிகழ்வு 2025 மே 25 ஆம் திகதி படையணி வளாகத்தில், சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இத்திட்டம் அப்பிரதேசத்திலுள்ள கர்ப்பிணிகளை ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததுடன், 2 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் நிதியுதவி வழங்கப்பட்டது.

221 வது காலாட் பிரிகேட் தளபதியின் கருத்திற்கமைய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.