30th May 2025
திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகத்துடன் இணைந்து, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, திருகோணமலை திஸ்ஸபுரம் அக்போ ரஜமஹா விஹாரையில் 2025 மே 27 அன்று மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கியது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்ட செயலாளர், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.