6th April 2025
பிரிட்ஜிங் லங்கா மற்றும் கால்நடை பங்குதார்களான "வெட்ஸ் பார் பியூச்சர்" ஆகியவற்றுடன் இணைந்து, 54வது காலாட் படைப்பிரிவினரால், 2025 மார்ச் 24, முதல் 2025 ஏப்ரல் 6, வரை நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யும் திட்டம் நடத்தப்பட்டது.
இத் திட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்கள் பரவுவதைத் தடுப்பது, ஆரோக்கியமான சூழலுக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டதுடன், இத் திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.