இங்கிரியவில் தேவையுடைய குடும்பத்திற்கு 1வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் புதிய வீடு

“தூய இலங்கை” திட்டத்திற்கமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பிரஜைகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், 1வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது. இவ் வீடு 58வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களால் 2025 ஏப்ரல் 02 அன்று பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

இந்த முயற்சிக்கு இங்கிரிய நிகேதனராமய தர்ம நம்பபான சமாதி வண. மனனே சிறிநந்த தேரர் அவர்கள் நிதியுதவி வழங்கினார். கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏஎஸ் ராஜரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 1வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பணியாளர் உதவியுடன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அப்பகுதி பொது மக்களும் கலந்து கொண்டனர்.