4வது கெமுனு ஹேவா படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானம்

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பொதுமக்களின் நல்வாழ்வை முன்னிலை படுத்தும் நிமித்தம் "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, 232 வது காலாட் பிரிகேட்டின் 4வது கெமுனு ஹேவா படையணியினரால் 2025 ஏப்ரல் 5 அன்று உன்னச்சிவிய பகுதியில் இரத்த தான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இத் திட்டத்தின் நோக்கம் அப்பகுதியின் இரத்த பற்றா குறையை நிவர்த்தி செய்வதாகும்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலிலும், 23வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையிலும் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.