சிவில் பணிகள்

தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக 542 வது காலாட் பிரிகேட் 2025 மார்ச் 08 ஆம் திகதி மன்னார் நகர சபை மண்டபத்தில் கலாசார நடனப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. "தமிழ் கலாசார நடனத்தின் மதிப்புகள்" என்ற கருப்பொருளில் இந்த நிகழ்வு, இன மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பது, பாடசாலை பிள்ளைகளின் திறன்களை மேம்படுத்துவது மற்றும் இராணுவத்திற்கும் மன்னார் சமூகத்திற்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


ஸ்ரீ கவிஸ்வர வேலுவனராம ஸ்ரீ சுகத தர்மோதய தர்மப் பாடசாலையின் மாணவ தலைவர்கள் பதவியேற்பு விழா 2025 மார்ச் 02 அன்று விகாரை வளாகத்தில் நடைபெற்றது. 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் வண. பிரதம தேரரின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


பொத்துவில், பனாமா மற்றும் நீலகிரிய பிரதேசங்களில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்கு பதிலளிக்கும் விதமாக 242 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளை படையலகுகள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டன.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "தூய இலங்கை" திட்டத்தின் கீழ், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 10 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் 2025 பிப்ரவரி 28 ஆம் திகதி சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு பூசுதல் திட்டத்தை மேற்கொண்டனர்.


கந்தேகெதர சாரண்யா தமிழ் பாடசாலையில் தூய இலங்கை திட்டத்தில் பங்கேற்ற 1 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 மார்ச் 03 அன்று பாடசாலைக்கு அண்மையில் உள்ள ஒரு வீட்டின் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய ஒருவரை மீட்டுள்ளனர்.


23 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஈ.எ எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் கிளிநொச்சியில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 40 மெத்தைகள் மற்றும் 40 தென்னம்பிள்ளைகளை நன்கொடையாக வழங்கினர். மாவனெல்ல திரு. சுமேத மோலிகமுவ அவர்களின் நிதியுதவியில் இந்த முயற்சி சாத்தியமானது.


தூய இலங்கை திட்டத்திற்கு அமைய, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியுபீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படையினர், பொதுமக்களுடன் இணைந்து, 2025 மார்ச் 01, அன்று கடற்கரை மற்றும் வீதி சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.


கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 பெப்ரவரி 26 அன்று ஹிகுரான புனித அந்தோணியார் தேவாலயத்தில் தூய்மைபடுத்தும் பணிகளை முன்னெடுத்தனர்.


புத்தூர் கதிரவெளி சரஸ்வதி பாலர் பாடசாலை, புதூர் கிராமத்தைச் சேர்ந்த 41 மாணவர்களுக்கு ஆரம்பகால கல்வியை வழங்குகிறது. மாகாண சபையின் கீழ் இயங்கினாலும், மேசை கதிரைகள் மற்றும் நீர் அமைப்புகளுடன் கூடிய சரியான சுகாதார வசதிகள், கட்டிட பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு சமையலறை போன்ற அத்தியாவசிய வளங்களைப் பெறுவதில் பாலர் பாடசாலை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது. 16 ஆண்டுகாலப் பணி அனுபவம் கொண்ட ஒரு பெண் ஆசிரியர் உட்பட மூன்று அர்ப்பணிப்புள்ள கற்பித்தல் ஆசிரியர்கள், பல மாணவர்களை உயர்கல்விக்கு வளர்ப்பதிலும் தயார்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.


541 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர், 2025 பெப்ரவரி 24 அன்று மாந்தையில் உள்ள திருக்கேஸ்வரம் கோவிலில் பொதுமக்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் திட்டத்தை நடத்தினர்.