மாணவ தலைவர்களுக்கான பதவியேற்பு விழாவில் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி

குண்டசாலை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தேசிய பாடசாலை அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2024 மே 23 ஆம் திகதி நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவின் போது, நாற்பத்தைந்து புதிய மாணவ தலைவர்களுக்கு தளபதி அவர்கள் சின்னங்களை அணிவித்தார். தனது சுருக்கமான உரையில் அவர், வலுவான தலைமைத்துவம் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும், அவை பொறுப்பான மற்றும் பயனுள்ள தலைவர்களை வளர்ப்பதற்கு அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.