12 வது காலாட் படைப் பிரிவு படையினரால் இரத்த தானம்

ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பௌத்த காருண்ய நிவாரண “ட்சு சீ” அறக்கட்டளையால் 2025 ஏப்ரல் 29 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வில் 12 வது காலாட் படை பிரிவின் படையினர் பங்கேற்றனர்.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எஸ் என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வின் போது இரத்த தானம் செய்தனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனை இரத்த வங்கியின் மருத்துவ குழுக்கள் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த பங்களிப்ப வழங்கினர்.