29th May 2025
9 வது கஜபா படையணியின் படையினர் 2025 மே 26 ஆம் திகதி 9 வது கஜபா படையணியில் நன்கொடை திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வின் போது, போரெவர் ஸ்கின் நேச்சுரல்ஸ் (தனியார்) நிறுவனத்தின் நிதியுதவியுடன், வெலிஓயாவில் 161 இராணுவ கர்ப்பிணி வீராங்கனைகள் மற்றும் சிவில் கர்ப்பிணிகளுக்கு அத்தியாவசிய பரிசுப் பொதிகள், தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த நன்கொடையைத் தொடர்ந்து, போரெவர் ஸ்கின் நேச்சுரல்ஸ் (தனியார்) நிறுவனத்தின் திருமதி சாந்தனி பண்டார, பதவிய மற்றும் சம்பத்நுவர மருத்துவமனைகளின் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து, கலந்து கொண்டவர்களுக்கு ஆலோசனை விரிவுரைகளை வழங்கினர்.