செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 மார்ச் 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 06 அன்று தனது அலுவலகத்தில் புதிதாக தொகுக்கப்பட்ட 75 ஆண்டுகள் பெருமை இதழின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கண்டியில் உள்ள பல முக்கிய இராணுவ தளங்களுக்கு நிருவாக செயல்பாட்டு விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயம் இலங்கை இராணுவத்திற்குள் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிருவாக சிறப்பை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் குழு 2025 மார்ச் 5 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தது.


தெற்காசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் - 2025 பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் 2025 பெப்ரவரி 23 அன்று நடைபெற்றது.


இலங்கை விமானப்படை தனது 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 பெப்ரவரி 28 முதல் மார்ச் 02, வரை தொடர்ச்சியாக 26 வது தடவையாக ‘விமானப்படை சைக்கிள் ஓட்டம் - 2025 போட்டியை நடத்தியது. மூன்று கட்டப் பந்தயம் வீரவிலவிலிருந்து இரத்தினபுரி, கண்டி, குருநாகல் மற்றும் கட்டுநாயக்க வழியாக காலி முகத்திடல் வரை 408 கி.மீ தூரத்தைக் கொண்டிருந்தது, இப்போட்டியில் வெளிநாட்டு போட்டியாளர்கள் உட்பட 166 சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.


தியதலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் இராணுவ இலகுரக ஆயுத சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படையணிகளுக்கிடையிலான துப்பாக்கி சூட்டு போட்டி - 2025 ஆனது 2025 மார்ச் 02 ஆம் திகதி நிறைவடைந்தது.


கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் ரியர் அட்மிரல் எச்ஜியூ தம்மிக்க குமார வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எம் மெரிடைம் பொல் பிஎஸ்சீ (டிஎஸ்) அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 பெப்ரவரி 25 அன்று இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.


இலங்கைக்கான அமெரிக்க தூதர் கௌரவ ஜூலி சங் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 பெப்ரவரி 19 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இலங்கை நீர் விளையாட்டு கழகத்தினால் 2025 பெப்ரவரி 22 முதல் 23 வரை கொழும்பின் துறைமுக நகர கடற்கரை பூங்காவில் வருடாந்த கடல் நீச்சல் சாம்பியன்ஷிப் வெற்றிகரமாக நிறைவடைந்தது.