10th September 2025
போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், ‘இராணுவத்திலிருந்து சிவில்’ சேவைக்கு’ எனும் சிவில் வாழ்க்கைக்காக சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளை தயார்படுத்தல் மற்றும் வலுவூட்டும் நிகழ்ச்சியை 2025 செப்டெம்பர் 09 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடாத்தியது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். பல விருந்தினர் பேச்சாளர்கள் நிதி முகாமைத்துவம், தொழில்முனைவோர் மற்றும் ஓய்வு காலத்தில் உணர்ச்சி மற்றும் உளவியல் நல்வாழ்வை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகளை வழங்கியதன் மூலம் மதிப்புமிக்க உதவிகளை வழங்கினர்.
பின்னர், இராணுவத் தளபதி மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின் முடிவில், தளபதி பங்கேற்பாளர்களுக்கு உரையாற்றியதுடன், ஓய்வு வாழ்க்கைக்குத் தயாராக வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.