செய்தி சிறப்பம்சங்கள்

பேலியகொடை ஜயதிலக்கராம புராண விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய 'சங்கவாசய' (பிக்குகள் தங்கும் மடாலயம்) 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.


கேணல் பிராண்டன் ஆஷ்லே வுட் தலைமையிலான ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு, ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜொன்ஸ்டன் (ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர்) அவர்களுடன் இணைந்து 2025 ஒக்டோபர் 22 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.


இலங்கை குத்துச்சண்டை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளிபோர்ட் கிண்ண குத்துச்சண்டை போட்டி 2025 ஒக்டோபர் 15 முதல் 19 ஆம் திகதி வரை கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.


இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து 58 வது காலாட் படைப்பிரிவின் தலைமையகத்தில் தொடர்ச்சியான மருத்துவத் திட்டங்களின் ஒரு பகுதியாக, புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் ஊனமுற்ற ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான மருத்துவ முகாமை 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி நடாத்தியது.


2025 ஒக்டோபர் 19 மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல அவசரநிலைகளுக்கு இராணுவத்தினர் உடனடியாக தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு 2025 ஒக்டோபர் 18 முதல் 20 ம் திகதி வரை இரண்டு நாள் செயல்பாட்டுத் தயார்நிலை, நிர்வாக மற்றும் வழங்கல் தயார் நிலை என்பவற்றை ஆய்வு செய்வதற்காக அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இந்தியா ரஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிக்கு 59 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழுவை தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அங்கீகரித்துள்ளது.


இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில், இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 206 அதிகாரவணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன், பயிற்சி பணிப்பகத்தினால் 2025 ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஒழுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


76 வது இராணுவ தின கொண்டாட்டத்திற்கு இணங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படையினர் கொஸ்கம அரச மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களை பழுதுபார்த்தனர். இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஒக்டோபர் 07 ஆம் திகதி மருத்துவமனை அதிகாரிகளிடம் உபகரணங்களை ஒப்படைத்தார்.


2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற 76 வது இராணுவ தின கொண்டாட்டங்களுக்கு இணங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்களினால் ஐந்து பிரிகேடியர்களுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டது.