கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு இராணுவத் தளபதி விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டெம்பர் 10 ஆம் திகதி கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியை, இராணுவ மருத்துவமனையின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.கே.எஸ்.எஸ். தொடங்கொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி பல வார்டுகளை ஆய்வு செய்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை விசாரித்தார். அவர் தீவிர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் நலன்புரி உணவகத்தையும் பார்வையிட்டதுடன், வசதிகள் மற்றும் தொடர்ச்சியான சேவைகளை ஆய்வு செய்தார்.