2025 செப்டம்பர் 18 முதல் 22 வரை மாலைத்தீவில் நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப்பில், இலங்கையின் ஆண்கள் கடற்கரை கரப்பந்து அணி, இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.
தேசத்தின் பாதுகாவலர்
2025 செப்டம்பர் 18 முதல் 22 வரை மாலைத்தீவில் நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப்பில், இலங்கையின் ஆண்கள் கடற்கரை கரப்பந்து அணி, இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.
இராணுவத் தலைமையகத்தின் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.எம்.கே.ஜீ.பீ.எஸ்.கே. அபேசிங்க அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 செப்டம்பர் 30, அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
13 வது பாதுகாப்பு சேவைகள் தடகள சாம்பியன்ஷிப் 2025 செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆறு வருடங்களுக்கு பின்னர், இராணுவத் தளபதி கிண்ண கோல்ப் போட்டி 2025 செப்டம்பர் 27 அன்று தியத்தலாவை கோல்ப் மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பிரிகேடியர் டி.டி.டி சேரசிங்க யூஎஸ்பீ அவர்கள் எழுதிய “மரணயே ஹோராவ துடு பட்டவர ஜயசென்” எனும் நூல் வெளியீட்டு விழா 2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் அங்கீகாரம் பெற்ற, இந்தியாவில் உள்ள மங்கோலிய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் சயாத் ஒட்சுரேன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 செப்டம்பர் 23 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இராணுவத்தின் பல படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 224 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன், பயிற்சி பணிப்பகத்தினால் 2025 செப்டம்பர் 22 மற்றும் 23, ஆம் திகதிகளில் படையணி சார்ஜன் மேஜர்களுக்கு பண்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
07 அதிகாரிகள் மற்றும் 78 சிப்பாய்கள் கொண்ட 52 ஏ மற்றும் பி கமாண்டோஸ் பாடநெறியின் விடுகை அணிவகுப்பு, 2025 செப்டம்பர் 20 அன்று ஊவா-குடாஓயாவில் உள்ள கமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் படைவீரர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், ரணவிரு சேவா அதிகாரசபையுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 19 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் தொடர்ச்சியான மருத்துவத் திட்டங்களின் ஒரு பகுதியாக, காயமடைந்த ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை நடாத்தியது.
லெப்டினன் கேணல் எஸ்.டி. பீரிஸ் யூஎஸ்பீ பீஎஸ்சி (ஓய்வு) அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆர்எஸ்பீ சிடீஎப்-என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்களை சந்தித்து, அவர் எழுதிய “எனது கமாண்டோ படையணியுடனான பயணம்” என்ற புத்தகத்தை 2025 செப்டம்பர் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் வழங்கினார்.