செய்தி சிறப்பம்சங்கள்

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 66 வது பதவி நிலை பிரதானியாக 2025 பெப்ரவரி 10 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.


தியவன்னா படகோட்ட நிலையத்தில் 2025 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 01 வரை நடைபெற்ற தேசிய உள்ளக படகுப்போட்டி 2025 இல் இலங்கை இராணுவ படகு அணி வெற்றி பெற்றது. முப்படைகள், கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை அணிகளின் பங்கேற்புடன் இந்தப் போட்டி நடைபெற்றது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 பெப்ரவரி 08 அன்று வன்னி பாதுகாப்புப் படைக்கு விஜயம் மேற்கொண்டார்.


2025 பெப்ரவரி 04 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய ஒற்றுமையையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான தேசபக்தி நிகழ்வுகளுடன் 77 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.


கொழும்பு புனித பெனடிக் கல்லூரியில் 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி நடைபெற்ற பாராட்டு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களும் கலந்து கொண்டார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சீ.கே வனசிங்க ஆர்.எஸ்.பீ யூ.எஸ்.பீ, அவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 06 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் இணைந்து 2025 பெப்ரவரி 5, அன்று ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசாய உள்ளிட்ட புனித தலங்களில் வழிப்பாடுகளில் ஈடுப்பட்டதுடன் மதகுருமார்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்று கொண்டார்.


இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 30 அன்று ரணவிரு ஆடை தொழிற்சாலையில் நடைபெற்ற முகாமைத்துவ குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் புதன்கிழமை (பெப்ரவரி 5) பாங்கொல்லை அபிமன்சல 3 நல விடுதியிலுள்ள போர் வீரர்களை சந்தித்தார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 பெப்ரவரி 05 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகதிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.