13th September 2025
2025 செப்டம்பர் 13, அன்று மிஹிந்து செத் மெதுரவில் சிறப்பு சக்கர நாற்காலி நன்கொடை திட்டம் நடைபெற்றது, இது மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அறக்கட்டளையுடன் இணைந்து முன்னாள் படைவீரர் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. சுவேந்திரினி திசாநாயக்க மற்றும் மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் துணைவியார் மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி. லாலி கொப்பேகடுவ ஆகியோருடன் கலந்து கொண்டார்.
பாரம்பரியமாக மங்கள விளக்கேற்றி, வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. இராணுவ நடனக் குழுவின் துடிப்பான வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து படைவீரர் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் வரவேற்பு உரை நிகழ்த்தினார். பின்னர் மிஹிந்து செத் மெதுர நல விடுதியின் வீரர்கள் சிறப்பு பாடல் நிகழ்ச்சியை வழங்கினர்.
இந்த விழாவின் போது மொத்தம் 56 சக்கர நாற்காலிகள் அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கப்பட்டன, இது முன்னாள் படைவீரர்களுக்கான ஆழ்ந்த நன்றியுணர்வையும் தொடர்ச்சியான பராமரிப்பையும் குறிக்கிறது. ஒரு போர் வீரரின் நன்றியுரை, குழு படம் மற்றும் தேநீர் விருந்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.