ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டீ.டப்ளியூ. வித்தியானந்த ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 செப்டம்பர் 09 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் எச்.டீ.டப்ளியூ. வித்தியானந்த ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 1991 டிசம்பர் 09 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் குறுகிய பாடநெறி எண் - 3 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1992 டிசம்பர் 19, இரண்டாம் லெப்டினன் நிலையில் கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். அவர் தனது சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு 2025 பெப்ரவரி 28 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 செப்டம்பர் 15 ம் திகதி தனது 55 வயதை அடைந்ததும், இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வு பெறவுள்ள நிலையில் தற்போது 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.

தனது இராணுவ வாழ்க்கையில், அவர் 3 வது கஜபா படையணியின் குழுத் தளபதி, புலனாய்வு அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரி, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் குழுத்தளபதி, 1 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, மற்றும் ஹைட்டி ஐக்கிய நாடுகளின் நிலைப்படுத்தல் பணியின் கீழ் இலங்கை படையலகின் கட்டளை அதிகாரி. கஜபா படையணி தலைமையக பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), பணிக்குழு 1 இன் பொது பணிநிலை அதிகாரி 2 (செயற்பாடுகள்) மற்றும் 3 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். மேலும் அவர் நெலுகல வன பயிற்சித் தளத்தில் பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், 10 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, கொழும்பு 04 பிரிவின் பிரிவுத் தளபதி, இராணுவ தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1 (நலன்புரி சங்க நிதி), 59 வது காலாட் படைப்பிரிவில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஊடக பணிப்பக பணிநிலை அதிகாரி 1, கேணல் (ஊடகம்) ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 593 வது காலாட் படைப்பிரிவின் பதில் பிரிகேட் தளபதி, கஜபா படையணி தலைமையக நிலைய தளபதி, இராணுவ தலைமையக மனித வள நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர், பின்னர் பணிப்பாளர் நாயகம், இராணுவ தலைமையக ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளதுடன், தற்போது 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றுகின்றார்.

இலங்கை இராணுவத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு ரண விக்ரம பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பீரங்கி கண்காணிப்பு பாடநெறி, அடிப்படை புலனாய்வு அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை பரசூட் பாடநெறி, கனிஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் ஐ.நா அமைதிகாக்கும் முன்-பணியமர்த்தல் பயிற்சி பாடநெறி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகள் தந்திரோபாய பாடநெறி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் சிரேஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் மலேசியா பணிநிலை மற்றும் தந்திரோபாயங்கள் தரம் III பாடநெறி ஆகியவற்றைப் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை அவர் பயின்றுள்ளார். மேலும் ரஷ்யா "மேற்கு - 2021" என்ற மூலோபாய கட்டளை இடுகைப் பயிற்சியிலும் பங்கேற்றுள்ளார்.