17th September 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், 2025 செப்டெம்பர் 16 ஆம் திகதி இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டி.டி.பீ. சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எல்எஸ்சீ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவத்தின் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.எம்.கே.ஜி.பி.எஸ்.கே அபேசிங்கே ஆகியோர் மரியாதையுடன் வரவேற்றனர்.