12th September 2025
2025 செப்டம்பர் 11 ஆம் திகதி சாலியபுர கஜபா சூப்பர் குரோஸ் பாதையில் நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவம் அனைத்திலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.
ஐந்து போட்டிகளை உள்ளடக்கிய இந்தப் போட்டியில் 11 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பதினெட்டு வீரர்கள் பங்கேற்றனர். இராணுவ ஓட்டுனர்கள் ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் உட்பட மொத்தம் பன்னிரண்டு பதக்கங்களை வென்றனர்.
இலங்கை பீரங்கி படைணியின் கன்னர் டி.என்.குமார, எம்எக்ஸ் 125 சீசீ மற்றும் எம்எக்ஸ் 250 சீசீ பந்தயப் பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்று சாம்பியன்ஷிப்பின் சிறந்த ஓட்டுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.