இலங்கை இராணுவம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு பயிற்சி திட்டத்தை நடத்தல்

இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயல் திட்டத்திற்கு இணங்க, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை இராணுவத்தின் உள்ளக விவகார பிரிவுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 12 அன்று கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையக கேட்போர் கூடத்தில் ஒரு நாள் ஊழல் எதிர்ப்புப் பயிற்சித் திட்டத்தை நடத்தியது.

"நேர்மையுடன் கூடிய ஒரு நாட்டை நோக்கி" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 1,900 பேர் கலந்து கொண்டனர். இராணுவத் தலைமையகத்தில் மொத்தம் 103 அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்து கொண்டதுடன் அதே நேரத்தில் சுமார் 1,800 பணியாளர்கள் ஜூம் வழியாக மெய்நிகர் முறையில் இணைந்தனர். இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், உள்ளக விவகாரப் பிரிவின் தலைவரான இராணுவ பதவி நிலை பிரதானி, , இராணுவத்தின் ஒழுக்க அதிகாரியாகப் பணியாற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.

வரவேற்புரை மற்றும் குறிக்கோள்களின் விளக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியதுடன், அதைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்ட ஜனாதிபதியின் மேலதீக செயலாளர் திருமதி சந்திமா விக்ரமசிங்க அவர்களின் உரை இடம்பெற்றது. அரசு நிறுவனங்களுக்குள் ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் உள்ளக விவகார பிரிவுகளின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் ஜெனரல் திருமதி தனுஜ பண்டார அவர்களால் நடத்தப்பட்ட ஒரு அமர்வு நடைபெற்றது, அவர் ஊழலின் தன்மை, தேசிய வளங்களில் அதன் தாக்கம் மற்றும் அத்தகைய சவால்களை எதிர்கொள்வதில் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாகக் கூறினார். இலங்கை சட்ட கட்டமைப்பு, தடுப்பு வழிமுறைகள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.

பங்கேற்பாளர்களின் கருத்து, அமர்வுகளின் மதிப்பீடு மற்றும் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இராணுவ அதிகாரிகளின் தொழில்முறை, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை நடத்தையை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய படியாகும், இது ஊழல் இல்லாத இலங்கை என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போவதை உறுதி செய்கிறது.