16th September 2025
2025 செப்டம்பர் 04 அன்று இராவணன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் இடம் பெற்ற பேருந்து விபத்தில் அசாதாரண துணிச்சலுடன் மூன்று பேரை மீட்கும் செயலில் ஈடுபட்ட, 2 வது விசேட படையணியின் கோப்ரல் டபிள்யூஎம்விஎம் பண்டார அவர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டெம்பர் 16 ம் திகதி அன்று கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் பாராட்டினார்.
அவரது துணிச்சலான செயலை அங்கிகரிக்கும் வகையில் லான்ஸ் கோப்ரல் நிலையில் இருந்து கோப்ரல் நிலைக்கு அவர் நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீட்பின் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட போதிலும் தனது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட காயமடைந்த சிப்பாக்கு இராணுவத் தளபதி பண ஊக்கத்தொகையை வழங்கினார்.
மேலும் இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் செயலாளர் லெப்டினன் கேணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) அவர்களும் கோப்ரல் பண்டாரவின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் வகையில், அவருக்கு பண ஊக்கத்தொகையை வழங்கினார்.