செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 09 ஆம் திகதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி எண். 19 இன் மாணவ அதிகாரிகளுக்கு வழக்கமான உரையை நிகழ்த்தினார்.


11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீ.சீ.எம்.ஜீ.எஸ்.டீ குரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 08 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


மாத்தறை ராஹூல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், “ராஹூல சஹன சவிய” திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்கும் முகமாக 2025 டிசம்பர் 07 அன்று இராணுவ தலைமையகத்தில் ரூ. 25 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.


அதிக மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட சமீபத்திய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 06 ஆம் திகதி மஹியங்கனைக்கு விஜயம் மேற்கொண்டார்.


இந்திய இராணுவத்தின் 73 பணியாளர்களைக் கொண்ட மருத்துவக் குழு 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து, தொடர்ந்து தனது ஆதரவைத் வழங்கி வருகின்றது.


நாடு முழுவதும் நிவாரணப் பணிகளுக்கு பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, 47 USAR பணியாளர்களைக் கொண்ட பாகிஸ்தான் மனிதாபிமான உதவிக் குழு, பாகிஸ்தான் K-9 பிரிவைச் சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற இராணுவ நாய்கள் மற்றும் அதிகளவான நிவாரணப் பொருட்களுடன், C-130 விமானத்தில் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தது.


இலங்கைக்கான ஜெர்மனியின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் கிளாஸ் மெர்கல் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மார்கோ ஹெல்கிரேவ் ஆகியோர் 2025 டிசம்பர் 05 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.


அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எல்.டி. பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் மேஜர் ஜெனரல் எச்.ஏ.ஐ. பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஆகியோர் 2025 டிசம்பர் 05 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடனான சம்பிரதாய சந்திப்பின் போது, அவர்களிடமிருந்து அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.


இராணுவத் தளபதி 11 வது காலாட் படைப்பிரிவிற்கு பொறுப்பான பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.


இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகளுக்கு நெஸ்லே ஸ்ரீலங்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது. 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ரூ. 8.5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான நெஸ்கெபே, நெஸ்டி மற்றும் நெஸ்டோமால்ட் தயாரிப்புகளை நன்கொடையாக வழங்கியது.