செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டம்பர் 01, அன்று மேஜர் ஜெனரல் ஆர்பீஎஸ் பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு மேஜர் ஜெனரல் நிலைக்கான அதிகார சின்னத்தினை வழங்கினார். நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் வீஎஸ்எம் எஸ்டிஎஸ் (இராணுவம்-II), 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் உள்ள தளபதி அலுவலகத்தில் இலங்கை இராணுவத் தளபதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


புகழ்பெற்ற 400 மீட்டர் தேசிய சாம்பியனான இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சாஜன் ஆர். நதீஷா, ஜப்பான் டோக்கியோவில் 2025 செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெற உள்ள உலக தடகள சம்மேளனத்தின் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மதிப்புமிக்க உலகளாவிய போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை பெண் தடகள வீராங்கனை இவர் ஆவார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில், இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலை 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி நிர்வாக உதவியாளர் பாடநெறி எண். 91 முதல் 95 வரை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) சான்றிதழ்களை வழங்கியது.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் படையணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிகள் 2025 ஆகஸ்ட் 27, அன்று இலங்கை இராணுவ தொண்டர் படை ரெண்டெஸ்வஸ் கிரிக்கெட் மைதானத்தில் நிறைவடைந்தன. இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


யக்கலை ரணவிரு எப்பரல் ஆடை தொழிற்சாலையின் நிர்வாகக் குழுக் கூட்டம் 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.army.lk, ஆனது எல்கே டொமைன் ரெஜிஸ்ட்ரியால் ஏற்பாடு செய்யப்பட்ட BestWeb.lk - 2025’ போட்டியில் அரச துறை பிரிவில் ‘மிகவும் பிரபலமான இணையத்தளம்’ மற்றும் வெண்கல விருதை வென்றுள்ளது.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 25 ஆம் திகதி இராணுவ போர் கருவி தொழிற்சாலைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர் சாஜன் வைடிஐ குமார அவர்கள் 2025 ஆகஸ்ட் 26 அன்று இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


2025 ஆகஸ்ட் 22 அன்று தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி I எச்.எல்.என்.டி லெகம்கே 57.53 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.