27th June 2025
9 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 24, அன்று சிறிமங்கலபுரம் கந்தளாய் காமினி ஆரம்ப பாடசாலையில் 46 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் நூலகப் புத்தகங்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
222 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டிஎம்ஜீகேஎச் டி சில்வா பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்த திட்டத்திற்கான நிதி உதவியை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி பாக்யா வீரசிங்க மற்றும் திரு. ரகுவரன் ஜெயசந்திரன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.