இலங்கை இராணுவம் வருடாந்த பாத யாத்திரையில் பக்தர்களுக்கு ஆதரவு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவப் படையினர் 2025 ஜூன் 20 முதல் 2025 ஜூலை 04 வரை உகந்தையில் இருந்து கதிர்காமம் வரை வருடாந்த பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். இந்த முயற்சி மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ், 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 122 வது காலாட் பிரிகேட் தளபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலிலிருந்து கடகமுவ வரையிலான பகுதியில் இராணுவ வீரர்கள் முக்கிய உதவிகளை வழங்கினர். பக்தர்களுக்கு பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு பாதைகள் அமைக்கப்பட்டன. வாரஹான மற்றும் கடகமுவவில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தினமும் 3,500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்களுக்கு மேலதிகமாக அன்னதானமும் கட்டகமுவவில் இராணுவத்தினரால் வழங்கப்பட்டது. மேலும், காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அதே நேரத்தில் பாதை முழுவதும் சுத்தமான குடிநீர், உணவு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளும் வழங்கப்பட்டன.