25th June 2025
51 வது காலாட் படைப்பிரிவு, 512 வது காலாட் பிரிகேட் மற்றும் 14 வது கஜபா படையணி ஆகியவற்றின் படையினர், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் நமசிவாய வித்தியாலயத்தில் நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த நாற்பது பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள் மற்றும் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதற்கான நிதியுதவியை யாழ்ப்பாணம் ரியோ ஐஸ்கிரீமின் உரிமையாளர் திரு. ஆர். பாஸ்கரன், யாழ். பல்கலைக்கழகத்தின் திருமதி வி. நிதுஷா மற்றும் யாழ்ப்பாணம் தேனு புட்சிட்டியின் உரிமையாளர் திரு. டி. மோகனராஸ் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள், பிள்ளைகள், அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.