25th June 2025
அமைதி மற்றும் ஒற்றுமைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவுகூரும் வகையில், 51 வது காலாட் படைப்பிரிவின் 511 வது காலாட் பிரிகேட் 2025 ஜூன் 14 ஆம் திகதி கோப்பாய் கருணாலயம் சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களை உள்ளடக்கிய ஒரு சமூக சேவைத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் சிறுவர்கள் இல்ல வளாகத்தில் சிரமதான திட்டத்தை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை சுகாதாரத்தை மேம்படுத்துதல், சிறுவர்களுக்கு தூய்மையான சூழலை வழங்குதல் மற்றும் இராணுவத்திற்கும் சமூகத்திற்கும் இடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த திட்டம் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ முத்துமலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வை 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.எம்.சீ. சமரசிங்க ஆர்எஸ்பீ அவர்கள் ஒருங்கிணைத்தார்.